இந்தியாவில் இவரால் மட்டும் தான் 400 டெஸ்ட் விக்கெட்டை எடுக்க முடியும் ; முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கருத்து ..!

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி இந்திய மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிறப்பான முரையில் நடைபெற உள்ளது. அதில் யார் வெற்றியை கைப்பற்ற போகிறார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பர்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த போட்டி ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு மீண்டும் இந்திய மற்றும் இங்கிலாந்துஅணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்று எதிர்பார்க்க படுகிறது.

சமீபத்தில் இந்திய வீரர்கள் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ, அதனை வைத்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களை அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கார்ட்லி அம்ப்ரோஸ் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் ” நான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் தீவிரமான ரசிகன். அவரது பிட்னெஸ் வைத்து பார்க்கும்போது அவர் நிச்சியமாக டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டை எடுக்க முடியும். கார்ட்லி அம்ப்ரோஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 405 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உண்மையாலுமே சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல 400 விக்கெட்டை கைப்பற்றும் திறன் அவரிடம் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர் பும்ரா என்று அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இதுவரை 18 டெஸ்ட் போட்டியில் விளையாடி 84 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ட்லி அம்ப்ரோஸ் சொன்ன படி 400 விக்கெட்டை கைப்பற்றுவாரா? பும்ரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.