வீடியோ : இப்படியெல்லாம் பேட்டிங் செய்ய முடியுமா ?? சச்சின் கூட இப்படி அடித்திருக்க மாட்டார் ; ஆனால் ஜோஸ் பட்லர் பட்டைய கிளப்பிவிட்டார் ;

0

நேற்று நெதர்லாந்து-ல் உள்ள வி.ஆர்.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கியது நெதர்லாந்து அணி. நெதர்லாந்து அணி இறுதி வரை போராடி 244 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்காட் 64, பாஸ் டீ லீடீ 56 ரன்களை அடித்தார். பின்பு 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

ஆனால் ஏதோ டி-20 போட்டி விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் 30.1 ஓவரில் 248 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது இங்கிலாந்து அணி. அதில் ஜேசன் ராய் 101, ஜோஸ் பட்லர் 86, பில் சால்ட் 49 ரன்களை அடித்துள்ளனர்.

இதற்கிடையில் தான் ஜோஸ் பட்லர் செய்த செயல் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. 28.4 ஒவரில் பவுலிங் செய்தார் வான் மீக்கிறேன் அதனை எதிர்கொண்டார் ஜோஸ் பட்லர். அப்பொழுது பந்து எதிர்பாராத விதமான WIDE சென்றது மட்டுமின்றி, பிட்ச்-ல் இரு முறை பந்து தரையில் பட்டது.

ஆனால் அதனை விடாமல் ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்தார். பாவம் அந்த பவுலர், கொஞ்சம் கூட இறக்கலாம் இல்லாமல் அடித்தார் ஜோஸ் பட்லர் என்று போட்டியின் கமென்டரி பேசிய நம்பர்கள் கிண்டல் அடித்து கொண்டனர். அதன் வீடியோ;

ஜோஸ் பட்லர் கடந்த ஐபிஎல் 2022 போட்டிகளில் இருந்து அதிரடியாகவே விளையாடி ரன்களை குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here