டெஸ்ட் போட்டியிலிருந்து வில்லியம்சன் விலகல்.. இதுதான் காரணமா?? மேலும் இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள்!! போட்டி எப்போது துவங்கும் சற்றுமுன் அறிவிப்பு!!

காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மும்பை டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்திய அணி மூன்று முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்க இருந்தது. காலையிலிருந்து மழைப்பொழிவு நீடித்து வருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலையில் 9 மணி, 9.30 மணி மற்றும் 10.30 மணி என மைதானத்தை நடுவர்கள் மற்றும் வல்லுனர்கள் பரிசோதித்து வருகின்றனர். ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அது குறைந்த பிறகே விளையாட முடியும் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

அடுத்ததாக 11.30 மணிக்கு ஒரு முறையும், 12 மணிக்கு ஒரு முறையும் பரிசோதிக்க உள்ளனர். அச்சமயம் திருப்தி அளிக்கும் வகையில் மைதானம் இருந்தால், அடுத்த அரை மணி நேரத்தில் போட்டியை துவங்கலாம் என்று நடுவர்கள் இரு அணிகளின் கேப்டன்களிடம் தெரிவித்துள்ளனர். 

இந்திய அணியை பொறுத்தவரை, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரஹானே, ஜடேஜா மற்றும் இசாந்த் சர்மா மூவரும் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இசாந்த் சர்மாவிற்கு பதிலாக சிராஜ் எடுத்து வரப்படலாம். அதேபோல் இந்திய அணி இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகிறது. ரஹானே இடத்திற்கு கேப்டன் விராட்கோலி உள்ளே வருகிறார். நியூசிலாந்து அணியின் வீரர்கள் குறித்த விவரங்கள் தற்போது வரை வெளிவரவில்லை. 

கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2வது டெஸ்ட் போட்டியில், துவக்க வீரர் டாம் லேதம் கேப்டன் பொறுப்பு வகிக்க உள்ளார். 

தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக 12 மணிக்கு ஆட்டம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் போட்டியில் காயம் காரணமாக கீபிங் செய்யாமல் பேட்டிங் மட்டுமே செய்துவந்த விருத்திமான் சஹா, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று விராட் கோலி குறிப்பிட்டார். ஆகையால் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெற்றிருக்கிறார்.

பந்துவீச்சில், ஜடேஜா காயம் காரணமாக வெளியில் இருப்பதால் அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா உள்ளே எடுத்து வரப்படலாம். அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர், பிரசித் கிருஷ்ணா, உமேஷ் யாதவ், சிராஜ் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.