HomeTrending Newsஒருநாள் போட்டிக்கான கேப்டனை அதிரடியாக மாற்றியது பிசிசிஐ ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

ஒருநாள் போட்டிக்கான கேப்டனை அதிரடியாக மாற்றியது பிசிசிஐ ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணி தான் இரு தொடரில் தொடர்ச்சியாக வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடர் :

அதனை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது இந்திய. அதற்க்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் முன்னணி வீரர்களான விராட்கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானை அரவைத்துள்ளது பிசிசிஐ. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஷிகர் தவான் தான் இந்திய அணியை வழிநடத்தினார். அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய.

indian Team 2

ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணியின் விவரம் :

ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபதி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமத் சிராஜ் மற்றும் தீபக் சஹார் .

கம்பேக் கொடுத்த இந்திய அணியின் தொடக்க வீரர் :

இந்திய அணியில் பல நாட்களாக யார் தான் இந்தியா அணியின் தொடக்க வீரர்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் கே.எல்.ராகுலுக்கு அறுவை சிகிச்சை காரணமாக அவரால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அதனால் இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகின்றனர்.

அதனால் கே.எல்.ராகுல் இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கான போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விகள் எழுந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற வேண்டிய நிலையில் எதிர்பாராத விதமான அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.

ஆனால், ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் பிட்னெஸ் சரியாக இருக்காது என்று பலர் சொன்னதால். ஆசிய கோப்பைக்கான அணியில் தேர்வு செய்த பிசிசிஐ ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் பேர் இடம்பெறவில்லை. ஆனால் அவரது நேற்று நடந்த பிட்னெஸ் பயிற்சியில் கே.எல்.ராகுல் சரியாக இருந்த காரணத்தால் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கே.எல்.ராகுலை கேப்டனாகவும், ஷிகர் தவானை துணை கேப்டனாகவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img