இவரை அணியில் எடுத்து ரிஸ்க் எடுக்க ஆசைபடவில்லை ; முதல் போட்டியில் இவர் இல்லை : ரோஹித் ஷர்மா அதிரடி முடிவு :

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவும் இந்த முறை இலங்கையில் நடைபெற வேண்டிய போட்டி சில பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இது இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் தான் நடந்து முடிந்துள்ளது.

இந்திய அணியின் விவரம் :

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவேஷ் கான்.

இதில் கே.எல்.ராகுல் இடம்பெற்றது பலருக்கு அதிர்ச்சியாக தான் உள்ளது. ஏனென்றால் கடந்த இரு மாதங்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். பின்பு ஜிம்பாவே தொடருக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. 1 மற்றும் 30 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

வருகின்ற 28 தேதி அன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலககோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை பெற்றது. அதனால் இந்த முறை போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் 15 பேர் கொண்ட ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல போகின்றனர். இதில் கே.எல்.ராகுல் இடம்பெருவரா இல்லையா ?? கே.எல்.ராகுல் இடம்பெற்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் போன்ற இருவரில் ஒருவர் தான் விளையாட வைக்க வேண்டும். இந்த இருவரும் இந்திய அணியின் முக்கியமான வீரராக கருதப்படுகிறது. அதனால் கே.எல்.ராகுலுக்கு முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்பு குறைவு தான்.

கே.எல்.ராகுலுக்கு பதிலாக யார் தொடக்க வீரராக விளையாட வைக்கலாம் என்று ரோஹித் ஷர்மா ஆலோசனையில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சூரியகுமார் யாதவ் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் ரோஹித் ஷர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் தான் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருக்கும்.

இந்திய அணியின் உத்தேச அணியின் விவரம் ;

ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், விராட்கோலி, ஹர்திக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், யுஸ்வேந்தர சஹால் மற்றும் அவேஷ் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here