வீடியோ : நேற்று நடந்த போட்டியில் தோனியை போலவே Helicopter ஷாட் அடித்த கே.எல்.ராகுல் வைரலாகும் பதிவு ;

0

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 லீக் சுற்று நேற்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.

அதனால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனை பார்த்தபோது நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணி குறைந்தது 200+ ரன்களை அடித்துவிடும் என்று நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆட்டம் இழந்த பிறகு ரன்களை அடிக்க இந்திய வீரர்கள் தடுமாறினார்கள்.

அதுமட்டுமின்றி, தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தனர். இருப்பினும் விராட்கோலி-யின் தொடர் ஆட்டத்தால் 60 ரன்களை அடித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 181 ரன்களை அடித்துள்ளது இந்திய அணி. அதில் கே.எல்.ராகுல் 28, ரோஹித் சர்மா 28, விராட்கோலி 60, சூரியகுமார் யாதவ் 13, ரிஷாப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. தொடக்கத்தில் பாபர் அசாம் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய அளவில் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் ரிஸ்வான் மற்றும் நவாஸ் செய்த பார்ட்னெர்ஷிப் அதிரடியாக இருந்த காரணத்தால் ரன்கள் குவிந்தன.

இறுதி ஓவர் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 182 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. அதனால் புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

எந்த போட்டியிலும் இல்லாத அளவிற்கு நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் போட்டியில் கே.எல்.ராகுலின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது தான் உண்மை. 2.6 பந்தில் நசீம் ஷா வீசிய பந்தை எதிர்கொண்டார் கே.எல்.ராகுல் அப்பொழுது அவர் அடித்த சிக்ஸர் தோனியின் Helicopter ஷாட் போலவே இருந்தது. அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

முதல் இரு போட்டிகளில் சரியாக விளையாட கே.எல்.ராகுல் நேற்று நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடியது மிகவும் முக்கியமான ஒன்று தான். இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் கே.எல்.ராகுலின் தொடக்க ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக தான் தெரிகிறது.

தொடக்க வீரராக கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவைப்படுகிறதா இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here