Advertisement
HomeTrending Newsஇந்திய அணியின் டி-20 போட்டிக்கான கேப்டன் ரோஹித் சர்மா இல்லை .. இவர் தான் கேப்டன்...

இந்திய அணியின் டி-20 போட்டிக்கான கேப்டன் ரோஹித் சர்மா இல்லை .. இவர் தான் கேப்டன் ; உறுதியான தகவல்

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் 14ஆம் தேதியுடன் உலகக்கோப்பை போட்டிகள் நிறைவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அதனால் யார் யார் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் அதில் நிச்சியமாக இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?? என்பதே சந்தேகம் தான். ஏனென்றால் இதுவரை விளையாடி இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி இப்பொழுது புள்ளிபட்டியலில் 5வது இடத்தில உள்ளது.

இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அரை இறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு கிட்டத்தட்ட சிரமம் தான். ஏனென்றால் குரூப் B பிரிவில் இருந்து முதல் இரு அணிகள் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். அதில் ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர்…!

இதற்கிடையே, ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு இடையேயான சீரியஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் யார் யார் இடம் பெற போகிறார் என்று பல எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்….!

ஆனால் அதில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு தரப்போவதாக தகவல் வெளியானது. அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னனி வீரர்கள் விளையாட போவதில்லை எனவும் இளம் வீரர்கள் மட்டுமே இடம்பெற போவதாக தகவல்கள் வெளியானது.

அதில் கே.எல்.ராகுல் தான் கேப்டனாக இருக்க போவதாகவும் தெரிகிறது. நியூஸிலாந்து அணிக்கு சீரியஸ் போட்டிகள் இந்தியாவில் நடைபெற போகிறது. அதனால் மைதானத்தில் ஒரு சிலர் மட்டுமே அனுமதி அளிக்கப்படுத்தாக செய்திகள் வெளியானது…!

சீனியர் வீரர்களுக்கு சற்று ஓய்வு தேவை படுகிறது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டே வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள், இலங்கை அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகள் ஐபிஎல் மற்றும் இப்பொழுது உலகக்கோப்பை போட்டிகள் என தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, வீரர்களும் அவரவர் குடுப்பதுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது பிசிசிஐ…! பிசிசிஐ சொல்வதை பார்த்தால் முழுக்க முழுக்க இளம் வீரர்களை வைத்து தான் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள போவதாக தெரிகிறது…! பிசிசிஐ எடுத்த இந்த முடிவு சரியா ? தவறா? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular