தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஒருநாள் தொடருக்கு புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்; காயம் காரணமாக ரோகித் சர்மா விலகல்!!

0

தென்னாபிரிக்கா சென்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. என் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. 

ஜனவரி 19ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. ரோகித் சர்மா காயம் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்ததால், இந்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது வரை அவரது காயம் குணமடையவில்லை. 

விராட்கோலி நீக்கப்பட்ட பிறகு, ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். தென்ஆப்பிரிக்கா அணியுடனான தொடரில் இந்த பொறுப்பை அவர் ஏற்க இருந்தார். ஏற்கனவே டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால், தற்போது ஒருநாள் தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார்.

ஏற்கனவே, ரோகித் சர்மா இல்லாததால், டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். மிகச்சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டு வெற்றிக்கு உதவியதால், அதே நம்பிக்கையுடன் ஒருநாள் போட்டிக்கும் அவரை கேப்டனாக நியமித்தால் சரியாக இருக்கும் என தேர்வு குழுவினர் முடிவு செய்து, புதிய கேப்டனாக நியமித்திருக்கின்றனர். துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேச ஐயர் இருவரும் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

ஜனவரி இரண்டாம் தேதி ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தென்னாபிரிக்கா சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட உள்ளனர். குறைந்தபட்சம் 14 நாட்கள் கட்டாயம் இந்த கட்டுப்பாட்டில் வீரர்கள் இருந்தாக வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா சுகாதாரத்துறை மற்றும் கிரிக்கெட் வாரியம் அறிவுரை கூறி இருக்கிறது. கட்டுப்பாட்டை மீறினால் அடுத்த நிமிடமே வீரர்கள் தொடரிலிருந்து நீக்கப்பட்டு, நாட்டிற்கு அனுப்பப்படுவர் என்றும் விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here