சற்றுமுன்: நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து திடீரென விலகிய கேஎல் ராகுல்.. வெளியானது உண்மையான காரணம்!! மாற்று வீரர் அறிவிப்பு??

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார் கே எல் ராகுல்.

டி-20 தொடரை கைப்பற்றிய பிறகு, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இப்போட்டிக்காக ஏற்கனவே வீரர்கள் முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த காரணங்களுக்காக விராட் கோலி விளையாட வில்லை. ஆகையால் அப்போட்டியில் அஜிங்கிய ரஹானே கேப்டன் பொறுப்பு வகிக்கிறார். அதேநேரம் ரோகித் சர்மாவும் டெஸ்ட் போட்டியில் இல்லை. துவக்க வீரர் ரோகித் சர்மா இல்லாததால், முதல் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், துரதிஸ்டவசமாக காலின் தசைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து கேஎல் ராகுல் விலகியிருக்கிறார். 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கான மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் அணியில் இணைந்திருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே இந்தியாவில் நடந்த, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.  

கே எல் ராகுல் விலகியது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது பிசிசிஐ. தனது அறிவிப்பில், “காலில் தசைப் பகுதியில் ஏற்பட்ட காயம் தற்போது தீவிரமடைந்துள்ளதால், டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விலகியிருக்கிறார். 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறமாட்டார்.

காயம் குணமடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை மேற்கொள்கிறார். அதன் பிறகு, அங்கேயே பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளார். அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா தொடருக்காக அவர் அங்கேயே தயாராகிறார்.” என குறிப்பிட்டிருந்தது.

மூன்றாவது டி20 போட்டியில் கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தப்பட்டதற்கு இதுதான் முக்கிய காரணம் எனவும் தெரிகிறது. கே எல் ராகுல் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதால், சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்குவர் என தெரிகிறது.