விராட் கோலி இப்படி எல்லாம் பேசுவார் என்று சத்தியமாக நினைத்து கூட பார்க்கவில்லை : இளம் வீரர் நெகிழ்ச்சி பேட்டி ..!

கடந்த ஐபிஎல் 2021 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30 வரை நடைபெறும் என்ற பிசிசிஐ கூறியுள்ளது. அதன்படி சிறப்பான முறையில் ஆரம்பித்த ஐபிஎல் 2021 போட்டிகள் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஐபிஎல் போட்டிகளை பாதியில் நிறுத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது.

யாருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது ?

நாட்களுக்கு முன்பு கொல்கத்தா அணியில் சில வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அதனால் கொல்கத்தா நைட் அணியை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கு தோற்று இருப்பது உறுதி செய்தது. சில சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து அணிகளில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 3 பேருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த 2 பேருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய இரு அணிகளிலும் தலா இருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்தது பிசிசிஐ.

அதனால் வேறு வழியில்லாமல் ஐபிஎல் 2021 போட்டிகளை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. வேறு வழியில்லாமல் ஐபிஎல் 2021 போட்டிகளை நிறுத்தி அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். மீதமுள்ள போட்டிகள் எப்பொழுது நடக்கும் என்று இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை.

நான் இந்த அளவுக்கு விளையாடுவதற்கு காரணம் இவர் தான் காரணம் மனம் திறந்து பேசியுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல். அதனை பற்றி பேசிய ஹர்ஷல் பட்டேல், கேப்டன் விராட் கோலியை பற்றி முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, விராட் கோலி எனக்கு ஒரு மெஸ்ஏஜ் செய்தார் அதில், மீண்டும் வருக ,நீங்கள் அணியில் இடம்பெற்ற உடனையும் எனக்கு அதிக நம்பிக்கை எழுந்துள்ளது என்று விராட் கோலி சொன்னதாக ஹர்ஷல் பட்டேல் கூறியுள்ளார்.

விராட்கோலி எப்பொழுதும் அனைத்து பவுலர்களுக்கும் அவரவர் திறமையை வெளிப்படுத்த நேரத்திற் கொடுப்பார். அப்பொழுது வெளிப்படுத்தவில்லை என்றாலும் சரி, ஏன் நடக்கவில்லை என்று போட்டிகளை பற்றி பேசி அதனை புரியவைப்பார் என்றும் கூறியுள்ளார் ஹர்ஷல் பட்டேல்.

ஐபிஎல் 2021, 7 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதல் இடத்தில உள்ளார் ஹர்ஷல் பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.