ஐபிஎல் 2021; ஆர்.சி.பி அணியில் இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தால் அதிரடியான ஆட்டம் இருக்கும் ; மைக்கல் வாகன் கருது….யார் அந்த வீரர்?

ஐபிஎல் 2021: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் வீரர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகளில் 3 போட்டிகள் வென்ற இந்தியா அணி தொடரை கைப்பற்றியது. அதிலும் இறுதியாக நடந்த ஐந்தாவது டி-20 போட்டி தான் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக இருந்தது…?

ஐந்தாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் நிர்ணையக்கப்பட்ட 20 ஓவரில் 224 ரன்களை எடுத்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 64 ரன்கள், சூரியகுமார் யாதவ் 32 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 39 ரன்கள் மற்றும் இந்திய அணியன் கேப்டன் விராட் கோலி 80 ரன்களை எடுத்துள்ளனர்.

225 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜேசன் ராய் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஜோஸ் பட்லர் 52 ரன்கள்,டேவிட் மலன் 68 ரன்கள், பரிஸ்டோவ் 7 ரன்கள் எடுத்துள்ளனர். அதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 188 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி 36 ரன்கள் விதியசத்தில் ஐந்தாவது டி-20 போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றியது.

Read More: தோத்து போயிருவோம் என்று பயமா ? ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ; முழு விவரம்…!

ஐபிஎல் 2021; ஆர்.சி.பி அணியில் இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தால் அதிரடியான ஆட்டம் இருக்கும் ; மைக்கல் வாகன் கருது….யார் அந்த வீரர்?

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தனர். அதனால் இந்திய அணிக்கு நல்ல வலுவான பார்ட்னெர்ஷிப் அமைத்துள்ளது என்று பல ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த விராட் கோலி ; நான் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட போவதாக அவரே கூறியுள்ளனர். அதனால் ஆர்.சி.பி அணி ரசிகர்கள் மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிரடியான ஆட்டம் மற்றும் அவரது பேட்டிங் ஸ்டைல் மிகவும் மற்றவர்களை வித்தியாசமாக இருக்கும், அதனால் நிச்சியமாக ஆர்.சி.பி. ஐபிஎல் அணிக்கு நல்ல வலுவான பேட்ஸ்மேனாக விராட் கோலி இருப்பார் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன்.