ஓவர் சீன்…!! காட்டிய குர்னல் பாண்டியா…! சக மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்..! குர்னல் பாண்டியா-வின் செயலால் கடுப்பில் ரசிகர்கள்…! ஏன் தெரியுமா…!

ஐபிஎல் 2021 போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு நடந்த 24வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்களை அடித்துள்ளார். அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 41 ரன்கள், ஜெய்ஸ்வால் 32 ரன்கள், சஞ்சு சாம்சன் 42 ரன்கள், சிவம் துபே 35 ரன்கள், டேவிட் மில்லர் 7 ரன்கள்,மற்றும் ரியல் பராக் 8 ரன்களை விளாசியுள்ளனர்.

பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா..14 ரன்களில் ஆட்டம் இழக்க, அதன்பின்னர் டி-காக் 50 பந்தில் 70 ரன்களை விளாசியுள்ளார்.

18.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்த நிலையில் 172 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதில் சூரியகுமார் யாதவ் 16 ரன்கள், குர்னல் பாண்டிய 39 ரன்கள், பொல்லார்ட் 16 ரன்களை எடுத்துள்ளனர்.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் குர்னல் பாண்டிய செய்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்த போது, 14வது ஓவரில் ராகுல் திவேத்திய பவுலிங் செய்தார்.

அதனை எதிர்கொண்ட குர்னல் பாண்டிய இரண்டு ரன்கள் ஓடி வந்த பிறகு மும்பை வீரர்கள் இருக்கும் பெவிலியன் பார்த்து கை அசைத்தார். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான அன்குல் ராய் அவருக்கு கையில் அணியும் கிரீம் ஒன்று கொடுத்தார்.

அதனை பயன் படுத்திவிட்டு, மரியாதையாக திருப்பி கொடுக்காமல் அதனை தூக்கி வீசி சென்றால் குர்னல் பாண்டிய. இவரது செயலால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் குர்னல் பாண்டிய.

ஆனால் இவருக்கு ஏன் இந்த சீன், என்று மற்ற ரசிகர்கள் மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் அவரை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளது வருகின்றனர். அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ ;