முதலில் நிறுத்துங்க ; இந்த விஷயத்தில் தோனிக்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமென்று நன்கு தெரியும் ; சேவாக் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதியில் இருந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ அணி இரண்டாவது இடத்திலும், சென்னை அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இன்று மதியம் 3:30 மணியளவில் தொடங்க போகும் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர். இந்த ஆண்டு தொடரில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

அதனால் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று பழிதீர்த்து கொள்ளுமா ? இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றால் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிடும் என்பது மாற்றுக்கருத்தில்லை.

சென்னை அணியின் கேப்டன் ஓய்வு:

இந்த ஆண்டு ஐபிஎல் 2023 உடன் தோனியின் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பலர் நினைத்து கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இருப்பினும் 41வயதான தோனி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்கலாம் என்று சமூகவலைதங்களில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் சென்னை அணி மோதியது.

அதில் டாஸ் வென்ற தோனி பேசியதில் : என்னுடைய ஓய்வை பற்றி நீங்க தான் யோசிக்கிறீர்கள்….! ஆனால் நான் இல்லை என்று கூறியது சென்னை ரசிகர்கள் இடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதனை பற்றி பேசிய சேவாக் கூறுகையில் ; “எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, ஏன் அடிக்கடி ஓய்வை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ? இதுவே தோனிக்கு இறுதியான ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் அதனை பற்றி நீங்க ஏன் கேட்கவேண்டும்…?”

“அது தோனியின் முடிவு. அடுத்த ஆண்டு விளையாடுவாரா ?? இல்லையா என்பதை தோனி தான் முடிவு செய்வார்,அது அவருக்கு நன்கு தெரியும்.”

41வயது ஆனாலும் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன் செய்வது சிறப்பாகவே இருக்கிறது. அதுமட்டுமின்றி, இன்னும் பிட்னெஸ் ஆக தான் விளையாடியும் வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் தோனி ஓய்வை அறிவிப்பாரா ?? இல்லையா ?? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கமெண்ட் பன்னுங்க..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here