இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.


ஆசிய கோப்பை :
இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளனர். அதில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற ஐந்து அணிகள் உறுதியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து 6வது இடத்திற்க்கு நான்கு (ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஹாங் காங் மற்றும் சிங்கப்பூர்) அணிக்கு இடையே தகுதி சுற்று நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெரும் அணி தான் ஆசிய கோப்பை 2022யில் 6வது அணியாக விளையாட முடியும். இதுவரை இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் அதிகபட்சமாக 7 முறை கோப்பையை வென்றுள்ளனர்.
அதனை அடுத்து இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் ஆசிய கோப்பைக்கான தொடரில் வென்றுள்ளனர். சமீபத்தில் தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இந்திய அணியின் விவரம் இதோ ;


ரோஹித் சஹானா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது தான் உண்மை. தென்னாபிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர் போட்டிகளில் வெற்றிகளை கைப்பற்றி வருகிறது. அதனால் இந்த முறை ஆசிய கோப்பையில் இந்திய அணி தான் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆசிய கோப்பை பற்றி ஒரு விடியோவை பதிவு செய்தனர். அதில் இந்திய அணியை பற்றி சில முக்கியமான தகவல் பதிவு செய்துள்ளார். அதில் ” 7 முறை ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி, 8வைத்து முறை வென்று உலக சாதனை படைக்கும்.”


“ஆனால் 140 கோடி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பது போல நிச்சியமாக வேறு எதுவும் ஈடாகாது. அதனால் அனைவரும் வாருங்கள் இந்த உலகத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு ஆசிய கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்று கூறியுள்ளார் ரோஹித். அந்த வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் படத்தை வெல்லுமா ?