ஐபிஎல் 2021; சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் இவர் இல்லை…..! ரசிகர்கள் அதிர்ச்சி….!

ஐபிஎல் 2021: வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ளன. அதனால் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு நடக்கபோகின்ற முதல் சில போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் தான் நடக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மார்ச் மாதம் தோட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றன. முதலில் தோனி, ராயுடு, கிருஷ்ணப்ப கவுதம்,ஹரி சங்கர் ரெட்டி வெருகல் முதலில் சென்னை மைதானத்தில் (சேப்பாக்கம்) பயிற்சியை ஆர்மபித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வருகின்ற ஏப்ரல் 10ஆம் மும்பை மைதானத்தில் போட்டி நடைபெற போகிறது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஐபிஎல் 2021; சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் இவர் இல்லை…..! ரசிகர்கள் அதிர்ச்சி….!

தென்னாபிரிக்கா வீரர் லுங்கி நிகிடி , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்த்தவர். அவரால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போட்டியில் அவரால் விளையாட முடியாது என்று தகவல் வெளியானது. அதற்கான காரணம் இதோ:

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி எதிர்கொள்ள போகிறது அதில் லுங்கி நிகிடி இடம்பெற்றுள்ளார். இருந்தாலும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு ஐபிஎல் அணியில் சேர்த்துக்கலாம் என்று தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளனர்.

அதனால் லுங்கி நிகிடி ஏப்ரல் 5ஆம் தேதி அவர் மும்பை வந்துவிடுவார். அனால் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளதால் அவரால் முதல் போட்டியில் விளையாட முடியாது என்று சிஎஸ்கே அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

கடந்த ஐபிஎல் 2020, 4 போட்டிகளில் விளையாடிய லுங்கி நிகிடி 9 விக்கெட் எடுத்துள்ளார். எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவர் இல்லையோ அதேபோல டெல்லி அணியிலும் முக்கியமான பவுலர் ராபட மற்றும் ஆண்ட்ரே அவர்களும் முதல் போட்டியில் விளையாடமாட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தென்னாபிரிக்கா அணியின் சூழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் இன்று மும்பை வந்து சேர்ந்துள்ளார். அதனால் அவரால் நிச்சியமாக முதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று சிஎஸ்கே அணி கூறியுள்ளது. கடந்த ஆண்டு தான் இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை. அதனால் நிச்சியமாக அவரது காம்பேக் இருக்கும் என்று சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.