கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பை 2022 இந்த மாதம் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 6 அணிகள் மட்டுமே விளையாட உள்ளனர். சமீபத்தில் தான் அதற்கான அணிகளை மற்ற நாடுகள் அறிவித்து வருகின்றனர்.


ஆசிய கோப்பையில் இடம்பெற போகின்ற அணிகளின் விவரம்:
ஆசிய கண்டத்தில் இருக்கும் நாடுகள் மட்டுமே இந்த கோப்பை போட்டியில் கலந்து கொள்ள முடியும். அதில் இந்திய, பாகிஸ்தான் , பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில் ஆறாவதாக எந்த அணி இடம்பெற போகின்றனர் என்ற கேள்வி எழுந்து. அதில் ஐக்கிய அரபு, குவைத், ஹாங் காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற அணிகளும் ஒரு மட்டுமே ஆறாவதாக ஆசிய கோப்பையில் இடம்பெற உள்ளனர்.
இந்திய அணியின் விவரம் ?


ஆகஸ்ட் 8 (இன்று) தான் ஆசிய கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்ள போகும் வீரர்களை பற்றி அறிவிப்பது இன்று தான் இறுதி நாள். சில நிமிடங்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பையில் விளையாட போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் இடம்பெறாத முன்னணி வீரர்:
கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார் ஜஸ்பிரிட் பும்ரா. இதுவரை அனைத்து விதமான (ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் ) பேட்டிகளில் விளையாடி முன்னணி வீரராக திகழ்கிறார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாட கூடிய அளவிற்கு இவரால் முடியும். ஆனால் ஆசிய கோப்பைக்கான போட்டியில் ஜஸ்பீர்ட் பும்ரா இடம்பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.


ஆமாம், ஜஸ்பிரிட் பும்ராவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் ஆசிய கோப்பையில் விளையாட முடியாமல் போனது. இந்திய அணியின் முக்கியமான ப்ளேயிங் 11ல் விளையாடும் வீரர்களில் ஒருவர் தான் பும்ரா. ஆனால் இப்பொழுது பும்ரா இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக யார் அந்த இடத்தில் விளையாட போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.