இந்திய அணியில் இருந்து இவரை வெளியேற்றுவது இந்தியாவுக்கு நல்லது இல்லை ; முன்னாள் வீரர் உறுதி ;

0

சீரியஸ் போட்டிகள் :

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 , ஒருநாள் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டி-20 தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டியிலும் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி :

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் கங்குலி, தோனி, விராட்கோலி மற்றும் இப்பொழுது ரோஹித் சர்மா. இவர்கள் தான் சமீப காலமாக இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி வருகின்றனர்.

இப்பொழுதெல்லாம் பிசிசிஐ இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் பஞ்சம் வைத்ததே இல்லை. ஆமாம், ஏனென்றால் எப்பொழுது ஆண்டுக்கு ஒருமுறை ஆவது 5 வீரர்களை இந்திய அணியில் அறிமுகம் செய்து வருகின்றனர். ஐபிஎல் 2022யில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் இடம் உண்டு.

விராட்கோலி:

தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் விராட்கோலி. 2008ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆகி பல சாதனைகளை செய்து வருகிறார். விராட்கோலி இதுவரை மொத்தம் 70 சதம் அடித்துள்ளார். இதுவரை சச்சின் மட்டுமே அதிகபட்சமாக 100 சதம் அடித்துள்ளார்.

ஆனால் 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி இறுதியாக 70வது சதம் அடித்தார். அதன்பின்னர் மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் விராட்கோலி. சமீப காலமாக விராட்கோலி பேட்டிங் செய்ய வந்தால் அதிகபட்சமாக 30 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்து வருகிறார்.

இதனால் இந்தியா அணியில் அவருக்கு பதிலாக பல இளம் வீரர்கள் திறமையுடன் உள்ளனர் என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா விராட்கோலியின் முக்கியத்துவத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் ” விராட்கோலி போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி பல ரன்களை அடித்துள்ளார். இந்திய அணிக்கு பல பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளார். அதனால் அவரை (விராட்கோலி) உடனடியாக அணியில் இருந்து வெளியேற்ற முடியாது.”

இப்படிபட்ட ஒரு வீரரை அணியில் இருந்து வெளியேற்றுவது தீர்வாக இருக்காது. நிச்சயமாக விராட்கோலி போன்ற பல வீரர்கள் இந்த மாதிரி கடுமையான நேரங்களை தாண்டி தான் வந்திருக்க முடியும் என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here