வீடியோ ; யாருக்கு வயசாயிடுச்சு…! அசத்தலாக ரன் அவுட் செய்த இம்ரான் தாகிர்..!!

வீடியோ ; யாருக்கு வயசாயிடுச்சு…! அசத்தலாக ரன் அவுட் செய்த இம்ரான் தாகிர்..!!

ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 19வது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்களை விளாசியுள்ளார். அதில் ருதுராஜ் கெய்கவாட் 33 ரன்கள், டுபலஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள்,  அம்பதி ராயுடு 14 ரன்கள் , ஜடேஜா 62 ரன்கள் மற்றும் தோனி 2 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 20 ஓவர் முடிவில் ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் கோலி 8 ரன்கள், தேவ்டட் படிக்கல் 34 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள், மேக்ஸ்வெல் 22 , டிவில்லியர்ஸ் 4 ரன்கள் அடித்துள்ளனர்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. அதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்யும்போது 15வது ஓவரில் பிராவோ பந்து வீசினார். அதனை எதிர்கொண்ட பெங்களூர் அணியின் பவுலர் ஜேமிசன் அதனை அடித்தார். அப்பொழுது திடிரென்று அங்க இருந்த இம்ரான் தாகிர் அந்த பந்தை எடுத்து சரியாக ஸ்டும்ப் பார்த்து வீசியதில் ரன் அவுட் ஆனார். 42 வயதான இம்ரான் தாகிர் சின்ன பையன் போல சுறுசுறுப்பாக அந்த பந்தை எடுத்து வீசி ரன் அவுட் செய்துள்ளார்.

அதன் வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ ;