விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தொம்சம் செய்தார் இந்திய அணி வீரர் ;

0

நேற்று வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. சிறப்பான தொடக்க அமைந்தாலும், பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் விக்கெட்டையும் இழந்து வந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இறுதி வரை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை அடித்தனர். அதில் பிராண்டன் கிங் 20, மாயேர்ஸ் 73, பூரான் 22, பவல் 23, ஹெட்மயேர் 20 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

ஆனால் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மாவுக்கு அடிபட்ட காரணத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் இந்திய அணியின் புதிய தொடக்க வீரரான சூரியகுமார் யாதவ் விளையாடிய அதிரடியான ஆட்டம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.

முதல் இரு போட்டிகளில் சரியாக விளையாடாமல் இருந்த சூரியகுமார் யாதவ் மேல் பல விமர்சனங்கள் எழுந்தது. தொடக்க வீரராக இருந்து கொண்டு ஏன் விளையாடுவது இல்லை. முதல் இரு போட்டிகளில் 24, 11 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை.

மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 13, 9, 8 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதனை கண்டுகொள்ளாமல் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெல்ல அவர் தான் முக்கியமான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சூரியகுமார் யாதவ் 44 பந்தில் 76 ரன்களை குவித்தார். அதனால் 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 165 ரன்களை அடித்தனர். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை நடந்த போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இதேபோல விளையாடினால் நிச்சியமாக உலகக்கோப்பை டி-20 2022 போட்டிக்கான இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதவ் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here