தோனியின் விக்கெட்டை கைப்பற்ற; ரிஷாப் பண்ட் செய்த வேலையை போடு உடைத்தார் பந்து வீச்சாளர் ; அவேஷ் கான்

ஐபிஎல் 2021; 14வது ஐபிஎல் தொடர் போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக 29 போட்டிகள் நிறைவடைந்த பிறகு சில வீர்ரகளுக்கு காரோண தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

சமீபத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அவேஷ் கான் அளித்த பேட்டியில் “அவர் எப்படி முதல் போட்டியில் தோனியின் விக்கெட்டை கைப்பற்றினார் என்பதை பற்றி கூறியுள்ளார். ஐபிபிஎல் 2021 தொடக்கத்தில் இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்தனர். பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

18.4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அதில் நீண்ட நாட்கள் கழித்து பேட்டிங் செய்த மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்த இரண்டாவது பந்தில் பெல்ட் அவுட் செய்தார் அவேஷ் கான்.

சமீபத்தில் தோனியின் விக்கெட்டை கைப்பற்ற அவர் என்ன செய்தார் என்பதை பகிந்துள்ளார். அதை பற்றி பேசிய அவர் ” நான் எப்பொழுது ஓடி வந்தாலும் ரிஷாப் பண்ட் பார்ப்பேன், அப்பொழுது அவர் ஏதாவது சைகை கட்டினால், நான் அதற்கு தவுந்த மாதிரிதான் பவுலிங் செய்வேன்.

எங்களுக்கு நன்கு தெரியும் தோனி பேட்டிங் செய்தது இறுதி நேரத்தில், அதனால் கண்டிப்பாக தோனி அதிரடியாக தான் பேட்டிங் செய்வார் என்று, அதனால் ரிஷாப் பண்ட் என்னிடம் Short Length Ball வீச சொன்னார். அதேபோல் நானும் பந்து வீசியதில் பேட் எட்ஜ் ஆகி பெல்ட் அவுட் ஆனார் தோனி.