ஆசிய கோப்பையில் விளையாடவில்லை என்றால் நிச்சியமாக டி-20 உலகக்கோப்பையில் வாய்ப்பு இருக்காது ; பினிஷருக்கு ஏற்பட்ட சிக்கல் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 6 அணிகளின் விவரம் :

இதில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற ஐந்து அணிகள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 6வது அணியாக இடம்பெற நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஹாங் காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற அணிகளில் ஒரு மட்டும் தான் 6வதாக ஆசிய கோப்பையில் பங்கேற்க முடியும்.

இந்திய அணியின் விவரம் :

Indian Team

அனைத்து அணிகளும் வீரர்களின் பட்டியலை அறிவித்து பின்னர் தீவிரமான பயிற்சியிலும், ஆலோசனையிலும் உள்ளனர். ஆனால் இரு தினங்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் இந்திய கிரிக்கெட் அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வாய்ப்பை இழக்க போகும் இந்திய அணியின் முக்கியமான வீரர் :

ஐபிஎல் 2022 போட்டியில் பெங்களூர் அணியில் பினிஷராக விளையாடிய தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் வெறித்தமான இருந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அயர்லாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அட்டகாசமாக ரன்களை அடித்துள்ளார். அதனால் நிச்சியமாக இந்த உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் இடம்பெறுவார் என்று பலர் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அது சந்தேகம் தான். ஏனென்றால் கடந்த நன்கு போட்டிகளில் தினேஷ் கார்த்திக் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. ஆமாம் . வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் விளையாடிய முதல் போட்டியில் மட்டும் தான் 41 ரன்களை விளாசினார். அதன்பின்னர் விளையாடிய போட்டிகளில் 7, 6, 12 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இருப்பினும் இந்த மாதம் இறுதியில் நடைபெற போகின்ற ஆசிய கோப்பைக்கான இந்தியா அணியில் தினேஷ் கார்த்திக் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதில் மட்டும் சரியாக விளையாடாமல் சொதப்பினால், நிச்சியமாக டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான். ஏனென்றால் கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் வெளியேறியுள்ளது. அதிரடியாக விளையாடுவாரா ? தினேஷ் கார்த்திக் ?