சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் ; அடேங்கப்பா… ! என்ன ஒரு திறமை ; தோனி-க்கு பிறகு இவர் தான்..! அதில் சந்தேகமும் இல்லை ;

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் அது ஐபிஎல் டி20 லீக் போட்டி தான். இது கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை 14 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. முதல் ஆண்டுக்கு பிறகு ரசிகர்களின் வரவேற்பை பெற்று இப்பொழுது ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது.

அதில் 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தல மகேந்திர சிங் தோனி தான் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான இந்திய அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் 2021 போட்டிகள் முடிந்து சில மாதங்களே ஆகியுள்ளது.

அதில் யார் கோப்பையை வெல்ல போகிறார் என்ற கேள்வியை விட தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்தது விலக போகிறார் என்ற கேள்வி தான் அதிகம் சமுகவலைத்தளங்களில் எழுந்து வந்த கேள்வி. ஏனென்றால் தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அவரது சர்வதேச போட்டிக்கான ஓய்வை அவரே அறிவித்தார்.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார்கள். ஆனால் சிஎஸ்கே அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் தோனி இருக்கிறார். அதனால் இன்னும் ஒரு ஆண்டு அல்லது இரு ஆண்டுகள் நிச்சியமாக ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் மகேந்திரா சிங் தோனிக்கு பிறகு யார் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவார் என்று பல கேள்விகள் எழுகின்றன. அதில் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார் ருதுராஜ்.

தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்திய ருதுராஜ் பின்னர் இறுதி நேரத்தில் 3 அரை சதம் அடித்துள்ளார் . பின்னர் இந்த ஆண்டு ஐய்ல் 2021 போட்டியில் அதிரடி வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதில் வெறும் நான்கு போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அதில் மூன்று சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, தோனியை போலவே இவரும் அமைதியான வீரர் என்பதை காண்பித்துள்ளார்…!!!

வருகின்ற ஐபிஎல் 2022 மற்றும் 2023 யில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சியமாக கேப்டனாக இருக்க வாய்ப்பு இருக்கலாம். அதுமட்டுமின்றி, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்தக் அலி கோப்பையில் மஹாராஷ்டிரா அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தால் நல்ல இருக்குமா ?? அல்லது யார் அடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டன் என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!