இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


இரண்டாவது போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 311 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 115, மாயேர்ஸ் 39, ப்ரூக்ஸ் 35, பூரான் 74 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. பார்ட்னெர்ஷிப் கிடைக்காமல் திணறியது இந்திய அணி. அதிலும் முதல் 6 விக்கெட்டை இழந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தான் வெற்றி என்று பலர் நினைத்தனர்.


ஆனால் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 49.4 ஓவர் முடிவில் 312 ரன்களை அடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய. மொத்தம் மூன்று போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால் தொடரை கைப்பற்றியுள்ளது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்:
இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் சூரியகுமார் யாதவ். கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ளார் சூரியகுமார் யாதவ். அதில் இருந்து இதுவரை முக்கியமான மிடில் பேட்ஸ்மேனாக உள்ளார்.


சமீபத்தில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில், இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார் சூரியகுமார் யாதவ். இவர் டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்துள்ளார்.
ஆனால் ஒருநாள் போட்டிகளில் எதிர்பார்க்கும் அளவிற்கு விளையாடுவது இல்லை என்பது தான் உண்மை. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 27, 16 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதேபோல இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13, 9 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.


இதேபோல தொடர்ந்து விளையாடினால், நிச்சியமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக தான் இருக்கும். அதுமட்டுமின்றி, விராட்கோலி அணியில் இடம்பெறும் போது சூரியகுமார் யாதவ் வெளியேற்றப்படலாம். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் முக்கியமான வீரரா ?