ஐபிஎல் : ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொடங்கிய நிலையில் இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 16வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வருகின்ற 23ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.


அதனால் ஏலத்தில் எந்த எந்த வீரர்களை கைப்பற்றலாம் என்று முடிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் எந்த வீரர்களை எந்த அணி தேர்வு செய்யும் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக திகழ்கிறது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
இதுவரை அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்த வீரர்களில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 வது இடத்தில் இருந்த காரணத்தால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போய்விட்டது.


அதனால் இந்த முறை நடைபெற உள்ள மினி ஏலத்தில் சரியான வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “மும்பை போன்ற ஐபிஎல் டி-20 அணி நிச்சியமாக சுழல் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது தான் வழக்கம். அதிலும் குறிப்பாக அனைத்து ஐபிஎல் அணிகளும் ரஷீத் கான் போன்ற வீரரை எதிர்பார்ப்பார்கள். அதனால் இந்த மினி ஏலத்தில் ஆடம் சம்ப அல்லது அடில் ரஷீத் ஆகிய வீரர்களில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலுவாக அமையும்.”
“ஏனென்றால் கடந்த ஆண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடிய உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த ராகுல் சஹாரை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு பதிலாக தென்னாபிரிக்கா அணியின் சுழல் பந்து வீச்சாளரான டப்பிறைஸ் ஷம்சி -ஐ மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.”


மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரரான பொல்லார்ட் ஓய்வை அறிவித்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரரை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்னுங்க..!