ஆசிய கோப்பை:
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. இது இந்திய வீரர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும்.


ஏனென்றால் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகள் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெற்றது. இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட போகின்றனர். அதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் உறுதியான நிலையில், இன்னும் 6வது அணி யாராக இருக்க போகிறார்கள் என்ற எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.
ஏனென்றால் 6வது இடத்திற்கு ஹாங் காங், சிங்கப்பூர், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அணிகளுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அணி மட்டும் தான் 6வதாக இடம்பெற முடியும்.
இந்திய அணியின் அறிவிப்பு :
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விவரத்தை அறிவித்தது பிசிசிஐ. அதில் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் காத்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் :
சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமத் ஷமி டி-20 போட்டிகளில் விளையாட போவதில்லை. அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார் என்று கூறி வந்தனர்.
ஆனால் இப்பொழுது பும்ராவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியமால் போனது. அதுமட்டுமின்றி, டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் பும்ரா விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


அதனால் இப்பொழுது மீண்டும் முகமத் ஷமி-யை டி-20 போட்டிகளிலும் , அக்டோபர் மாதத்தில் நடைபெற போகின்ற உலககோப்பையிலும் ஷமி இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முகமத் ஷமி 2013ஆம் முதல் இதுவரை வெறும் 17 சர்வதேச டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.