HomeTrending Newsவீடியோ; என்ன ஆச்சு சிராஜ்-க்கு ? ஏன் பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறினார் ? அவருக்கு...

வீடியோ; என்ன ஆச்சு சிராஜ்-க்கு ? ஏன் பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறினார் ? அவருக்கு பதிலாக அந்த ஒரு பந்தை மட்டும் ஷர்டுல் தாகூர் வீசினார் ; காரணம் இதுதான்

நேற்று ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் மதியம் 1; 30 மணியளவில் தொடங்கியது இரண்டாவது டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் டெஸ்ட் போல் இல்லாமல் சொதப்பல் ஆட்டத்தை தான் விளையாடியுள்ளனர்.

63.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 202 ரன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அதில் கே.எல்.ராகுல் 50, மயங்க் அகர்வால் 26, புஜரா 3, ரஹானே 0, ஹனுமா விஹாரி 20, ரிஷாப் பண்ட் 17, அஸ்வின் 46, ஷர்டுல் தாகூர் 0, ஷமி 9 , பும்ரா 14, முகமது சிராஜ் 1 போன்ற ரன்களை கைப்பற்றியுள்ளனர்.

அதன்பிறகு பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 18 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்களை கைப்பற்றியுள்ளனர். அதில் டீன் எல்கர் 11, மர்க்ரம் 7, பீட்டர்சன் 14 ரன்களையும் அடித்துள்ளனர். இப்பொழுது தென்னாபிரிக்கா அணி 167 ரன்கள் ட்ரையல் நிலையில் உள்ளது. அதிக ரன்களை அடித்து இந்திய அணியை வெல்லுமா ?? அல்லது இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்டை கைப்பற்ற போகிறார்களா… ??

இதற்கிடையில் தான் முகமது சிராஜ்-க்கு ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. 16வது ஓவர் முகமது சிராஜ் தான் வீசி கொண்டு இருந்தார். அந்த ஓவரில் இறுதி பந்தை வீசும் போது அவரது கால் தசை பிடித்துவிட்டது அதனால் அவருக்கு காலில் பலமான வலி ஏற்பட்டது. பின்னர் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார் முகமது சிராஜ். பின்னர் அந்த இறுதி பந்தை ஷர்டுல் தாகூர் தான் வீசினார்.

அதன் வீடியோ ;

முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸ் ல் 3.5 ஓவர் பந்து வீசி அதில் 4 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். அசுர வேகத்தில் இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்டை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்…! ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றால் பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாழ்வா சாவா ஆட்டமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img