Advertisement
HomeTour Seriesபும்ராவிற்கு இவர் எவ்வளவோ மேல் ; தென்னாபிரிக்கா அணியை திணறடித்த இந்திய பவுலர் ; பா...

பும்ராவிற்கு இவர் எவ்வளவோ மேல் ; தென்னாபிரிக்கா அணியை திணறடித்த இந்திய பவுலர் ; பா ..! வெறித்தனமான பவுலிங் இதுதான் ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று போட்டியில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம்போல பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் ப்ளேயிங் 11 :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், தீபக் சஹார், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்கா அணியின் பேட்டிங் :

முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை தொடருந்து மூன்று வீரர்களும் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பவும மற்றும் ரிலீ போன்ற இரு வீரர்களும் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர்.

இருப்பினும் ஐடென் மார்க்ரம் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் கொஞ்சம் ரன்களை பெற்றது தென்னாபிரிக்கா அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 106 ரன்களை அடித்துள்ளது தென்னாபிரிக்கா அணி. அதில் டி-காக் 1, பவும 0, ரிலீ 0, ஐடென் மார்க்ரம் 25, டேவிட் மில்லர் 0, ஸ்டப்ஸ் 0, வானே பர்னெல் 24, மகாராஜ் 41, ரபாட 6 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 107 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்க போகிறது இந்திய.

பும்ராவிற்கு மாற்றமாக இடம்பெற்று அசத்திய பவுலர் :

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு பும்ராவிற்கு கால் தசை பிடித்துவிட்டது. அதனால் அவரால் இன்றைய போட்டியில் விளையாட முடியாது என்றும், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் அணியில் இடம்பெற்றுள்ளதாக ரோஹித் சர்மா கூறினார். ஒரு பவுலர் ரன்களை குறைவாக கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முக்கியமான விக்கெட்டை கைப்பற்ற வேண்டும்.

ஆனால் கடந்த சில போட்டிகளாகவே பும்ராவின் ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். ஆமாம், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடிய பும்ரா 2வது போட்டியில் ஒரு ஓவருக்கு 11.50 ரன்களையும், மூன்றாவது போட்டியில் 12.50 ரன்களையும் விட்டுக்கொடுத்து வருகிறார்.

இதே நிலை தொடர்ந்தாள் இந்திய அணிக்கு ஆபத்தாக தான் இருக்கும். ஏனென்றால் முன்னணி வீரரே இப்படி அதிகபடியான ரன்களை கொடுத்தால் எப்படி சமாளிக்க முடியும். ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பும்ராவிற்கு பதிலாக தீபக் சஹார் அணியில் இடம்பெற்றுள்ளார்.

பும்ராவை விட சிறப்பாகவும் அதிரடியாக பவுலிங் செய்து வருகிறார் தீபக் சஹார். இன்றைய போட்டியில் 4 ஓவர் பவுலிங் செய்த தீபக் சஹார் 24 ரன்களை (ஒரு ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில்) விட்டுக்கொடுத்து இரு முக்கியமான் விக்கெட்டை கையாற்றியுள்ளார்.

இப்படி சிறப்பாக விளையாடும் தீபக் சஹார் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதற்கு புவனானேஸ்வர் குமாருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தீபக் சஹார் பவுலிங் மற்றுமின்றி அவ்வப்போது பேட்டிங் செய்து ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular