HomeTrending Newsஇந்த விஷயத்தில் தோனியை யாருமே மிஞ்ச முடியாது ..! அதில் தோனி எப்பையுமே ஸ்பெஷல் தான்...

இந்த விஷயத்தில் தோனியை யாருமே மிஞ்ச முடியாது ..! அதில் தோனி எப்பையுமே ஸ்பெஷல் தான் ; ஹர்பஜன் சிங் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

இந்திய கிரிக்கெட் அணிக்கு பல விருதுகளை பெற்று கொடுத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. அதுமட்டுமின்றி, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்று கொடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் இப்பொழுதும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டு வருகிறார் தோனி. சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் கூல் பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

தோனி பற்றி ஹர்பஜன் கூறுகையில் ; சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தோனி கேப்டனாக இருந்த போது, என்னை அணியில் எடுக்கலாமா வேண்டாமா என்று பல யோசனைகள் எழுந்தன. இது தோனியை தாண்டி பிசிசிஐ கையில் தான் முடிவு உள்ளது. அப்பொழுது நான் வேண்டாம் என்று கூட முடிவு செய்தார்கள். இந்த விஷயத்தில் கேப்டனை தாண்டி பிசிசிஐ தான் பெரிய இடத்தில் உள்ளனர்.

ஆனால் மற்ற வீரர்களை விட தோனி தான் சக வீரர்களை ஆதரவு கொடுக்க தெரிந்த ஒரே வீரர். ப்ளேயிங் 11 வீரர்கள் மட்டுமின்றி, அணியில் இல்லாத வீரர்களையும் தோனி எப்பையுமே ஆதரித்து தான் வந்துள்ளார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

பின்னார் விராட்கோலி மற்றும் கங்குலி ஆகிய இருவருக்கும் இடையேயான மோதலை பற்றி பேசியுள்ளார். அதில் என்னால் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த மாதிரியான விஷயம் நடக்கும்போது நாம் சரியாக பார்த்து பேச வேண்டும். ஆனால் பெரிய வீரர் ( விராட்கோலி) மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்.

ஆனால் கங்குலி மிகச்சிறந்த இந்திய அணியிம் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவர் தான் நான் டீமில் இல்லாத போது என்னை அணியில் தேர்வு செய்துள்ளார். ஒரு சீரியஸ் போட்டிகளில் 32 விக்கெட்டை கைப்பற்றினேன். அதில் நான் தான் முதல் ஹாட்ரிக் விக்கெட்டையும் பெற்றேன் என்று சந்தோசமாக பேசியுள்ளார் ஹர்பஜன் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img