மற்ற அணிகளில் இல்லாத ஒன்று பாகிஸ்தான் அணியில் இருகிறது ; அதனால் பெருமை படுகிறேன் ; பாபர் அசாம் பேட்டி

0

நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி சரியாக பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதனால் வேறு வழியில்லாமல் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி. தொடக்க வீரரான பாபர் அசாம் மற்றும் முகமத் ரிஸ்வான்ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாத காரணத்தால் பாகிஸ்தான் அணிகளுக்கு குறைவான ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதுமட்டுமின்றி, பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 137 ரன்களை அடித்தனர். அதில் ரிஸ்வான் 15, பாபர் அசாம் 32, முகமத் ஹரிஸ் 8, மசூத் 38 மற்றும் சதாப் கான் 20 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

ஆனால் பாகிஸ்தான் அணியை போலவே தொடர்ந்து விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியால் ரன்களை அடிக்க முடியாமல் திணறினார்கள். இருந்தாலும் பென் ஸ்டோக்ஸ் விளையாட அதிரடியான ஆட்டத்தால் 19 ஓவரில் 138 ரன்களை அடித்த இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

ஆசிய மற்றும் உலகக்கோப்பை போன்ற இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி இறுதி போட்டி வரை முன்னேறிய நிலையில் தோல்வியை பெற்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் கூறுகையில் ; “இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். நிச்சியமாக இந்த உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு தகுதி உள்ளவர்கள். இந்த உலகக்கோப்பை முழுவதும் எங்கள் ஊரில் விளையாடியது போல ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். முதல் இரு போட்டிகளில் தோல்வி பெற்று மோசமான நிலையில் இருந்தோம். ஆனால் அதன்பின்பு 4 போட்டிகளில் விளையாடி முன்னேறியுள்ளோம்.”

“நான் எப்பொழுதும் அணியில் இருக்கும் வீரர்களை அவர்களுக்கு பிடித்த மாதிரி விளையாட சொல்வேன். இன்றைய போட்டியில் 20 ரன்கள் குறைவாக மாறிவிட்டதாக தெரிகிறது. ஆனால் இன்று மட்டுமின்றி எப்போழுதும் உலகின் சிறந்த பவுலிங் அட்டாக் செய்யும் அளவிற்கு திறமையான அணி தான் பாகிஸ்தான். எதிர்பாராத வகையில் ஷாஹீன் அபிரிடிக்கு காயம் ஏற்பட்டது, இது சாதாரணமாக போட்டியில் நடக்கும் ஒன்று தான் என்று கூறியுள்ளார் பாபர் அசாம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here