இந்திய அணிக்கு பயிற்சியை விட இதுதான் ரொம்ப முக்கியம் ; நம்ம விராட்கோலி ஆ?? இப்படி சொல்றது… !! என்ன சொன்னார் விராட்கோலி ; முழு விவரம் இதோ ;

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடியது. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான்.

அதன் பின்னர், அடித்த போட்டி 6 நாட்கள் கழித்து வருகின்ற 31ஆம் தெது அன்று தான் இரண்டாம் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் ; எங்கள் (இந்திய) வீரர்களுக்கு பயிற்சியை விட அவருக்கு ஓய்வு தான் அதிக தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அதேபோல் மூன்று நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று தான் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். வருகின்ற 31ஆம் தேதி அன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி. இது மிகவும் முக்கியமான போட்டி.

விராட்கோலி ஏன் பயிற்சியை விட ஓய்வு முக்கியம் என்ற சொல்லிருக்கிறார் தெரியுமா ???

சமீபத்தில் தான் ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடந்தது. அதற்கும் முன்னாள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற்றது. அதனால் வீரர்களுக்கு சரியான ஓய்வு இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் இப்பொழுது ஓய்வு தான் முக்கியம் என்று கூறியுள்ளார் விராட்கோலி.

இந்திய வீரர்கள் அனைவரும் திறமையான வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. அதில் வெற்றி பெற்றால் போது, அதன்பிறகு நடக்கும் மூன்று போட்டிகளில் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம். ஒருவேளை நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் நிச்சியமாக அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து விடும்…. !!!

அதுமட்டுமின்றி, இந்திய அணிக்கு 6வது பவுலராக ஹார்டிக் பாண்டிய கிடைத்துள்ளார். சமீப காலமாக அவர் பவுலிங் செய்வதில்லை. ஆனால் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய இந்திய அணிக்கு 6வது பவுலிங் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டு இப்பொழுது வலைபயிற்சி செய்து வருகிறார் ஹார்டிக் பாண்டிய என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வலுவான இந்திய அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…..!!!