வீடியோ ; இப்போ தெரிகிறது ஏன் தோனி என்றால் அனைத்து வீரர்களுக்கும் பிடிக்கிறது என்று..! தல தலதான் ..!

0

ஐபிஎல் 2022: ஐபிஎல் ரசிகர்களே ரெடியா ? அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் அவரவர் அணியுடன் இணைந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் டி-20 போட்டிகள் என்று வந்தால் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி செய்தி வெளியாகி கொண்டே இருக்கும். இந்த முறை மெகா ஏலம் என்பதால் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது சென்னை.

பின்னர் ஏலத்தில் கடினப்பட்டு ஒரு சில சென்னை வீரர்களை மீண்டும் கைப்பற்றியது சென்னை. அதில் ராபின் உத்தப்பா, தீபக் சஹார், ப்ராவோ , அம்பதி ராயுடு போன்ற வீரர்களை மறுபடியும் சென்னை அணியே கைப்பற்றியுள்ளது. அதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

இதுவரை நான்கு முறை சாம்பியன் படத்தை கைப்பற்றிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டியில் சென்னை அணி சாம்பியன் படத்தை தக்கவைத்துக்கொள்ளுமா ?? இல்லையா ??

இதற்கிடையில் சென்னை வீரர்கள் அனைவரும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி 19 வயதான ராஜேவர்தன் ஹாங்கர்ககர் இந்த முறை சென்னை அணியில் இடம்பெற்றுள்ளார். அதில் தோனி அவருக்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டுமென்று அறிவுரை கூறிய பிறகு அவர் (ராஜவர்தன்) அடித்த சிக்ஸர்வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

தோனி என்று சொன்னால் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகவும் பிடிக்கும். அதுமட்டுமின்றி, எப்படியாவது ஒரு முறையாவது தோனி அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வமும் நிச்சியமாக அனைத்து வீரர்களிடமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் தோனி எப்பொழுது இளம் வீரர் மற்றும் சக வீரர்களை சரியாக வழிநடத்த கூடிய வீரர் தான்.

40 வயதான தோனி இன்னும் ஐபிஎல் விளையாடுகிறார் என்றல் அதற்கு முக்கியமான காரணம் , அவர் ரன்களை அடிப்பது இல்லை. அவர் சக வீரர்களை சரியாக தேர்வு செய்து, சரியாக வழிநடத்தி வெற்றியை கைப்பற்றுவதில் சிறந்த கேப்டன் தோனி தான் என்பதில் சந்தேகமில்லை…!

சென்னை ரசிகர்களே நீங்க சொல்லுங்க..! இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் படத்தை தக்கவைத்துக்கொள்ளுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here