மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நம்பிக்கை இருக்கலாம்..ஆனால் இதுமட்டும் இருக்கவே கூடாது…! இருந்துச்சு.. டீம் close-த ; முன்னாள் இந்திய வீரர் அதிரடி பேட்டி

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று எல்ல ஆண்டுகளும் நடைபெற்று வருகிறது ஐபிஎல். இந்த ஆண்டு 14வது ஐபிஎல் சீசன் ஆகும். முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க உள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் அதிபட்சமாக 17 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் 10 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியம் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இன்றைய போட்டிக்கு நல்ல விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருதில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியை முன்னாள் இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பியை கைப்பற்றியுள்ளது. அதுவும் 2013,2015,2017,2019 மற்றும் 2020. அதனால் இந்த ஆண்டும் கோப்பையை கைப்பற்றிவிட்டால் அது ஹாட்ரிக் வெற்றி ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் வலுவான வீரரால் உள்ளனர். அதனால் போட்டிகளில் பேட்டிங் அல்லது பவுலிங் செய்யும்போது மிகவும் சுலபமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி எதிர்காலத்தை நினைவில் கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் போது ஒரு சிலரை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைப்பார்கள்.

இதுவரை ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வலுவான (பேட்டிங் & பவுலிங்) அணி தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த இரு ஆண்டுகளாக கோப்பையை கைப்பற்றியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற நம்பிக்கை இருக்கலாம்.

ஆனால் ஒருபோதும் அதிக நம்பிக்கை இருக்கவே கூடாது. அவ்வாறு இருந்தால் நிச்சியமாக சொதப்பல் தான் ஆகும் என்று கூறியுள்ளார் பிரக்யான் ஓஜா. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லுமா ?? அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லுமா ? என்பதை பொருத்துதான் பார்க்க வேண்டும்.