ஐபிஎல் : இந்திய கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற போட்டியாக திகழ்கிறது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் போட்டிகள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஐபிஎல் டி-20 போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. ஆமாம், இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் தான் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 4 போட்டிகளில் வென்ற நிலையில் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தை கைப்பற்றியுள்ளனர்.
முன்னணி வீரர்களான சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, பொல்லார்ட், பும்ரா போன்ற வீரர்கள் இடம்பெற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்படி ஒரு நிலைய என்று ரசிகர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால் வருகின்ற மினி ஏலத்தில் சரியான வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் வருகின்ற மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய அவர் ” மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரரான பொல்லார்ட் பல போட்டிகளில் வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்துள்ளார். ஆனால் இப்பொழுது அவர் (பொல்லார்ட்) ஓய்வு பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏமாற்றமாக தான் இருக்கும்.”
“அதற்கு பதிலாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் விளையாடிய ஜேசன் ஹோல்டர், நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹாம் மைதானமான வான்கடேவிற்கு சரியாக இருப்பார். ஏனென்றால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கையில் 20.55 கோடி மட்டுமே இருக்கிறது. அதில் 9 வீரர்களை வாங்க வேண்டிய சூழலுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தள்ளப்பட்டுள்ளது. அதனால் ஒரே வீரருக்கு 10 அல்லது 12 கோடி செலவு செய்வது சுலபமாக அமையாது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.”