CSK-ல ஒன்னும் இல்ல..! இனிமேல் இவங்கதான் மாஸ் ஆன அணி…அதுல சந்தேகமே இல்லை… ; அஸ்வின் கருத்து
இந்தியாவில் சமீபத்தில் ஆரம்பித்த ஐபிஎல் 2021 சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் ரசிகர்களும் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி மக்கள் வரவேற்பை பெற்று இப்பொழுது சிறப்பான முறையில் எல்ல ஆண்டுகளும் நடைபெற்று வருகிறது. இது ஷார்ட் பார்மட் போட்டி என்றதால் இதில் பல விறுவிறுப்பான நிகழ்வுகள் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெல்லும் ?? யார் கோப்பையை வெல்வார்கள்?? என்ற கருத்தை எல்லாம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை கூறியுள்ளனர். அதன்வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது கருத்தை கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் இருந்த அஸ்வின் இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; அவருக்கு பிடித்த அணியை பற்றி கருது கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலிமை வாய்ந்த அணி என்பதில் சந்தேகம் இல்லை.
அவரது அணி வீரர்கள் மிகவும் அதிரடியாகவும் சரியான நேரத்தில் பேட்டிங் அல்லது பவுலிங்கை செய்து பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தான் வலுவான அணியாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி கடந்த இரு ஆண்டுகளும் (2019 & 2020) தொடர்ந்து கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.
அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு அவர்கள் கோப்பையை வெல்ல நிச்சியமாக பலமாக யோசனை செய்வார்கள் என்றும் கூறியுள்ளார் ரவி சந்திரன் அஸ்வின். டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர் பந்து வீசி 1 விக்கெட் எடுத்த நிலையில் 47 ரன்களை கொடுத்துள்ளார். அதாவது ஓவருக்கு 11.80 ரன்கள் என்ற விதத்தில் கொடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.