நிச்சியமாக இந்த ஐபிஎல் அணிதான் கோப்பையை வெல்லும்…!! அடித்து சொல்லும் மைக்கல் வாகன்…!! ஒருவேளை சரியாக இருக்குமோ …??

நிச்சியமாக இந்த ஐபிஎல் அணிதான் கோப்பையை வெல்லும்…!! அடித்து சொல்லும் மைக்கல் வாகன்…!! ஒருவேளை சரியாக இருக்குமோ …?? இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நாளை ஆரம்பிக்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர்.

2008ஆம் ஆண்டு முதல் 2020 வரை சிறப்பான முறையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஐபிஎல் 14வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கிறது ஐபிஎல் போட்டி. முதல் போட்டி நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இண்டிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

நிச்சியமாக முதல் போட்டியில் பல விறுவிறுப்பான நிகழ்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு கோப்பை வென்ற மும்பை இண்டிங்ஸ் அணியில் பேட்டிங் வலுவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் புதிதாக இணைந்துள்ள மேக்ஸ்வெல். அதனால் சரியான போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கின்றன.

சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் 2021ஆம் போட்டியில் மும்பை இண்டிங்ஸ் அணிதான் வெல்லும் இரண்டாவதாக சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி ஒருநாள் , டி-20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான கோப்பையை கைப்பற்றியுள்ளது. அப்போது எல்லாம் இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா , ஹார்டிக் பாண்டிய எதாவது செய்தால் மும்பை அணி தான் சிறந்தது. இந்திய வீரர்களுக்கு மும்பை இண்டிங்ஸ் அணி வீரர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று பல கருத்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவருக்கு மும்பை இண்டிங்ஸ் அணி என்றால் மிகவும் பிடிக்கும் போல அதனால் தான் எப்பொழுதும் மும்பை இண்டிங்ஸ் வீரர்கள் பற்றியும் மும்பை இண்டிங்ஸ் அணி தான் கோப்பை வெல்லும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.