மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.. சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்…..!!! யார் அது தெரியுமா ?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்…!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்….!!! யார் அது தெரியுமா ?

சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஐபிஎல் 2021 சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் ஆரம்பித்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஐபிஎல் 2021வரை தோனி தான் கேப்டனாக உள்ளனர். இதுவரை நடந்த இரண்டு போட்டியில் சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 4வது இடத்தில் உள்ளது.

முன்னாள் சிஎஸ்கே அணியின் வீரரான முந்தைய முரளிதரனின் இதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். அவர் இப்பொழுது நன்றாக இருப்பதாகவும் , அவர் இன்று வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டியில் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

முத்தையா முரளிதரன் இதுவரை சர்வதேச போட்டிகளில் 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் பவுலிங் செய்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்கள், ஒருநாள் போட்டியில் 534 விக்கெட் மற்றும் டி-20 போட்டியில் 13 விக்கெட் எடுத்துள்ளார்.

இப்பொழுது சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணியில் பவுலிங் பயிற்சியாளராக இருக்கிறார் முத்தையா முரளிதரன். அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021யில் மூன்று போட்டிகளில் விளையாடிய சன்ரைஸ்சர்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அடுத்த போட்டியில் ஆவது வெல்லமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்…!!

அதுமட்டுமின்றி ஏன் கேன் வில்லியம்சன் இன்னும் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் இடம்பெறவில்லை என்று ரசிகரகள் நீண்ட நாட்கள் சமுகவலைத்தளங்களில் கேள்விகள் எழுகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்னும் சில போட்டிகளில் அவர் நிச்சியமாக அணியில் இருப்பார் என்று பயிற்சியாளர் கூறியுள்ளார்.