HomeTrending Newsஇப்படி விளையாடினால் தான் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற முடியும் ; இந்திய வீரர் உறுதி ;

இப்படி விளையாடினால் தான் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற முடியும் ; இந்திய வீரர் உறுதி ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் , டி-20 போட்டிகள் சிபிராக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த முடிந்த போட்டிகளில் இந்தியா அணிதான் முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி, இப்பொழுது நடக்கும் போட்டிகளை வைத்து தான் டி-20 உலககோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய முடியும்.

அதனால் பிசிசிஐ, கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகளை சிறப்பாக விளையாடிய பல வீர்ரகளுக்கு இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்புகளை கொடுத்துள்ளனர். இருப்பினும் இப்பொழுது இருக்கும் இந்திய அணியில் 7 அல்லது 8 வீரர்கள் உறுதியான நிலையில், மீதமுள்ள இடத்திற்கு தான் போட்டி எழுந்துள்ளது.

அதனால் வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு தான் வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. அதுமட்டுமின்றி இந்திய அணிக்கு தொடக்க வீரர்களும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அப்பொழுது ஷிகர் தவான் அணியில் விளையாடாததை ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

ஆனால் ஐபிஎல் 2022யிலும் பெரிய அளவில் விளையாடவில்லை. அதனால் தான் தென்னாபிரிக்கா , இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஒருநாள் போட்டியிலும் மாட்டும் ஷிகர் தவான் பெயர் இடம்பெற்றது.

ஏனென்றால், இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இவரை விட்டால் அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் யாரும் இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்களை ஆட்டம் இழக்காமல் அடித்துள்ளார் தவான். அதுமட்டுமின்றி 100+ ரன்களை பார்ட்னெர்ஷிப் அடித்த பட்டியலில் ரோஹித் மற்றும் தவான் 18 முறை 100 ரன்கள் பார்ட்னெர்ஷிப் செய்துள்ளனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் கூறுகையில் ; “என்னுடைய முழு எண்ணம் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் விளையாடுவது தான். அதனால் என்னால் முடிந்தவரை அனைத்து போட்டிகளிலும் விளையாட போகிறேன்.”

“நான் இப்பொழுது சரியாக விளையாடி வருகிறேன். அதனால் முடிந்த வரை ரன்களை அடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.” ஒருநாளை போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இந்திய அணிக்கு எந்த அளவிற்கு முக்கியமான வீரர் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கிழே COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img