ஐயோ… !!! நட்ராஜன் ஐபிஎல் 2021 போட்டியில் இருந்து விலகபோகிறார்… உறுதி செய்தது சன்ரைஸ்சர்ஸ் அணி…! முழு விவரம் இதோ..!

ஐபிஎல் 2021 போட்டிகள் ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்தாக அமைந்துள்ளது. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதுவரை 16 ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் , இரண்டவது இடத்தில் , மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 , சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் அறிமுகம் ஆன நட்ராஜன் சிறப்பான பந்து வீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் 2020, 16 போட்டிகளில் விளையாடிய நட்ராஜன் 16 விக்கெட்டை கைப்பற்றியுள்ளர். அதுமட்டுமின்றி யாக்கர் மன்னன் என்ற ரசிகர்களால் போற்றப்பட்டர்.

அதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்று பயணத்தில் இடம்பெற்ற நட்ராஜன் அதனை சரியாக பயன்படுத்தி முக்கியமான சில விக்கெட்டை கைப்பற்றினர். அதுமட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் நட்ராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 வைத்து தான் உலககோப்பைக்கான டி-20 அணியை இந்திய முடிவு செய்யும். அதனால் நட்ராஜ் பலமாக பயிற்சி செய்து வந்த நிலையில் இப்பொழுது சில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுவரை சன்ரைஸ்சர்ஸ் அணி இதுவரை 4 போட்டிகள் விளையடியுள்ளது. ஆனால் நட்ராஜன் முதல் இரு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

அதன்பிறகு நடந்த இரு போட்டியிலும் நட்ராஜன் இல்லாத காரணத்தால் நட்ராஜன் ஏன் போட்டியில் இல்லை, அவருக்கு என்ன தான் ஆச்சு என்று பல கேள்வி சமுகவலைத்தளங்களில் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நட்ராஜனின் முழங்காலில் பலமாக அடிப்பட்டுவிட்டது. அதனால் தான் அவரால் கடைசி இரு போட்டிகளில் விளையாட முடியவில்லை என்று அணி நிர்வாகம் கூறியுள்ளார்.

இருந்தாலும் இப்பொழுது அவருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும். அதனால் அவர் ஐபிஎல்- லின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து அவர் வெளியே போக வேண்டியுள்ளது. அவருக்கு இன்னும் ஓய்வு தேவை படுகிறது. அதுமட்டுமின்றி அவர் மருத்துவமனையில் இருந்து வந்தாலும் மீண்டும் அவர் ஐபிஎல் விதிமுறைகள் படி 7 நாட்கள் தனிமை படுத்தப்படுவார். அப்படியே இருந்தாலும் நிச்சியமாக நீண்ட நாட்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதனால் நிச்சியமாக இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் (ஐபிஎல் 2021யில் இருந்து விலகினார் நட்ராஜன்) என்று உறுதியாக கூறியுள்ளனர். இதனால் நட்ராஜனின் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இப்பொழுது சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியளில் 5வது இடத்தில் உள்ளது.