ஐபிஎல் ; கடந்த ஆண்டு 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். டி-20 போட்டி என்ற காரணத்தால் ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டியில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளனர். அதனால் மெகா ஏலமும் நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் 2023 போட்டிக்கான சின்ன ஏலம் நடைபெற உள்ளது. அதில் யார் யார் எந்த அணி கைப்பற்ற போகின்றனர் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 4 முறை கோப்பையை வென்றுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 2022 ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசமான நிலையில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் மெகா ஏலம் தான். அதில் பல முக்கியமான வீரர்களை சென்னை அணி இழந்தது.
அதில் முக்கியமான வீரர் டூப்ளஸிஸ் தான். ஆமாம், தொடக்க வீரரான டூப்ளஸிஸ் மற்றும் ருதுராஜ் போன்ற வீரர்களின் பார்ட்னெர்ஷிப் தான் 2021ஆம் ஆண்டு கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி சிறந்த தொடக்க ஆட்டம் அமையவில்லை.
அதிலும் நியூஸிலாந்து வீரரான டேவன் கான்வே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார். ஆனால் பெரிய அளவில் ரன்களை அடிக்காத காரணத்தால் ஒருசில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றைய உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

அதில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டேவன் கான்வே 58 பந்தில் 92* ரன்களை அடித்துள்ளார். அதனால் தான் நியூஸிலாந்து அணியால் 200 ரன்களை அடிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி, சூப்பர் 12 லீக் சுற்றில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியுள்ளது நியூஸிலாந்து அணி.
அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக டேவன் கான்வே களமிறங்கி விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2023 தான் தோனிக்கு இறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments