பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ட்ரை சீரியஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் இடத்திலும், நியூஸிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் அணி இறுதி இடத்தில் உள்ளனர்.


இந்த சீரியஸ் தொடரில் முதல் இரு இடங்களில் இருக்கும் வீரர்கள் தான், இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நியூஸிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆடை இல்லாமல் மைதானத்தில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் தவித்து கொண்டே வந்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டையும் இழந்த நிலையில் 147 ரன்களை அடித்தனர்.


அதில் பின் ஆலன் 13,, கான்வெ 36, வில்லியம்சன் 31, கிளென் பில்லிப்ஸ் 18, சாப்மேன் 32 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 148 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி தொடக்க வீரரான ரிஸ்வான் பெரிய அளவில் தொடக்க ஆட்டத்தை விளையாடாமல் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் கேப்டனான பாபர் அசாம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் 18.2 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 149 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. இதில் ரிஸ்வான் 4, பாபர் அசாம் 79*, முகமத் நவாஸ் 16, ஹாய்டர் அலி 10* ரன்களை அடித்துள்ளனர்.


இந்த ட்ரை சீரியஸ் தொடர்கள் நியூஸிலாந்து நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் நேரத்தில் நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் தீடிரென்று ஆடை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்தை பார்த்து ஓடினார்.
அதனை பார்த்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சியானது. உடனடியாக அங்கு இருந்த போலீஸ் விரைவாக சென்று அந்த நபரை கைது செய்துள்ளனர். அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது..!