என்ன விடுங்க ..! இவர் மிகவும் சிறப்பாக பந்து வீசியுள்ளார் ; எதிரணி வீரரை பாராட்டி தள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக் ;

இன்றுடன் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது இரண்டாவது டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய அணி 109.5 ஓவர் முடிவில் 325 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்திய.

அதிலும் முக்கியமான ஒன்று, அனைத்து இந்திய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியது ஒரே வீரர் தான், அது நியூஸிலாந்து அணியை சேர்ந்த அஜாஸ் பட்டேல். அவர் செய்த இத்தகைய செயலுக்கு நியூஸிலாந்து வீரர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூஸிலாந்து அணி வெறும் 28.0 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வெறும் 62 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்திய அணி 70 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 276 ரன்களை கைப்பற்றியது இந்திய, பின்பு ஆட்டத்தை Declare செய்தது இந்திய அணி.

இரண்டாவது இன்னிங்ஸ்- ல் விளையாடிய நியூஸிலாந்து அணி 56.3 ஓவர் முடிவில் 167 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி சுருண்டது. அதனால் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. போட்டி முடிந்த பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த பேட்டியில் ;

நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நியூஸிலாந்து அணியை சேர்ந்த அஜாஸ் பட்டேல் சிறப்பான முறையில் பந்து வீசியுள்ளார். ஏனென்றால் வான்கடே மைதானத்தில் அவ்வளவு எளிதாக சுழல் பந்து வீச முடியாது.

ஆனால் அதனை புரிந்து கொண்டு சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் 10 விக்கெட்டை ஒரே போட்டியில் கைப்பற்றியுள்ளார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தெரிந்து நானும் அக்சர் பட்டேலும் சிறப்பாக பந்து வீசியுள்ளோம்.

நான் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாட ஆர்வமாக தான் இருக்கிறேன். இதுவரை அப்படி செய்தது இல்லை, ஆனால் இந்த முறை அதனை செய்ய ஆசைப்படுகிறோம் என்று இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்..!