கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது இந்திய கிரிக்கெட் அணி தான். இப்பொழுது தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு டெஸ்ட் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. ஆனால் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் சொல்லும் அளவுக்கு இல்லை.
நிச்சியமாக இந்திய அணி தான் ஐசிசி உலகக்கோப்பை 2021 டி20 போட்டிக்கான கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று பல கருத்துக்கள் வெளியானது. ஆனால் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான நிலையில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி.
அதனால் மொத்தம் ஐந்து போட்டிகளில் முன்று போட்டிகளில் மட்டுமே வெற்றியை கைப்பற்றி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய அணி. இந்த உலகக்கோப்பை போட்டி ஆரம்பிக்கும் முன்பே விராட்கோலி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார்.
இப்பொழுது விராட்கோலி க்கு பிறகு இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா தான் கேப்டனாக உள்ளார். சமீபத்தில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றது. அதில் மூன்று போட்டிகளிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட்கோலியை அடுத்து ரோஹித் சர்மா தான் சிறந்த முறையில் இந்திய அணியை வழிநடத்துவார், அதனால் அவரை தான் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக நியமிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விராட்கோலிக்கு கேப்டனாக இருப்பதால் வேலை பளு அதிகமாக இருப்பது போல் இருக்கிறது அதனால் தான் இந்த முடிவு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விராட்கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெறுவது சரியாக இருக்குமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க …!!!