இந்திய அணியின் பினிஷருக்கு காயம்..! அடுத்த போட்டியில் நடக்கப்போகும் முக்கியமான மாற்றம் இதுதான் ; அப்போ வெற்றி உறுதிதான் ;

0

உலகக்கோப்பை 2022: கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்த மாதம் (நவம்பர்) 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 31 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற போகிறது இவர்கள் தான் என்று கணிக்க முடிகிறது.

இந்திய அணியின் பலம் இப்பொழுது பலவீனமாக மாறியுள்ளது :

கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை 2021 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங்-ல் அதிரடியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களின் பங்களிப்பு இந்திய அணியின் பலமாக மாறியது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2021 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பவுலிங் பலவீனமாக மாறியது தான் உண்மை. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணியின் பவுலிங் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் சூப்பர் 4 லீக் சுற்றில் இருந்து வெளியேறியது இந்திய.

ஆனால் இப்பொழுது அதற்கு எதிர்மாறாக நடைபெற்று வருகிறது தான் உண்மைக்கு. ஏனென்றால், இப்பொழுது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது தான் உண்மை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்தியா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

நாளை மதியம் 1:30 மணியளவில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோத உள்ளனர். அதில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான தினேஷ் கார்த்திக் -க்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணியும் மோதின. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தென்னாபிரிக்கா. இதற்கிடையில், இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக்-க்கு அடிபட்டது. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது சிரமம் தான்.

தினேஷ் கார்த்திக்-ன் பங்களிப்பு:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவது இல்லை என்பது தான் உண்மை. இந்திய அணியின் பினிஷராக திகழும் தினேஷ் கார்த்திக் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1, தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களை அடித்துள்ளார்.

அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக் -ஐ இனிவரும் போட்டிகளில் தேர்வு செய்வது சிரமம் தான் என்பதில் சந்தேகமில்லை. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் தினேஷ் கார்த்திக்-க்கு பதிலாக ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்) இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் தினேஷ் கார்த்திக்-ன் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்ற? தினேஷ் கார்த்திக்-க்கு பதிலாக இந்திய அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here