HomeTrending Newsகடைசி ஆட்டத்தில் மிஸ் பண்ணிட்டேன்; ஆனால் அடுத்த ஆட்டத்தில் நிச்சியமாக சதம் அடிப்பேன் ; இந்திய...

கடைசி ஆட்டத்தில் மிஸ் பண்ணிட்டேன்; ஆனால் அடுத்த ஆட்டத்தில் நிச்சியமாக சதம் அடிப்பேன் ; இந்திய வீரர் உறுதி ;

சீரியஸ் போட்டிகள் :

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. அதனால் இன்று நடக்க உள்ள போட்டி இந்திய அணிக்கு முக்கியமில்லை.

இந்திய அணி:

இந்த தொடரில் முன்னணி வீரர்களான ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், ரோஹித் சர்மா, விராட்கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ.

சமீபத்தில் தான் இங்கிலாந்து அணியை டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் வென்றது இந்திய. அதே நம்பிக்கையில் இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடி ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று இரவு 7 மணியளவில் போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

அதில் ஆவது ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா ? இந்திய கிரிக்கெட் அணி ?

ஸ்ரேயாஸ் ஐயர் :

இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அவ்வப்போது வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதிலும் குறிப்பாக விராட்கோலி-க்கு ஓய்வு கொடுத்தால் அந்த இடத்தில் நிச்சியமாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 54, 63 ரன்களை அடித்துள்ளார். அதிலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எதிர்பாராத விதமான நடுவர் அவுட் கொடுத்ததால் விக்கெட்டை இழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இதனை பற்றி பேசிய ஐயர் கூறுகையில் ; “நான் அடித்த ரன்கள் எனக்கு மிகழ்ச்சியாக தான் இருக்கிறது.”

“ஆனால் என்னுடைய விக்கெட்டை இப்படி இழந்தது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இறுதிவரை நின்று விளையாடி இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிபெற வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தேன். ஆனால் நிச்சியமாக அடுத்த போட்டியில் நான் சதம் அடிப்பேன்.”

“ஒருகட்டத்தில் எங்களால் பார்ட்னெர்ஷிப் செய்ய முடியாமல் போனது, அந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் நானும் அவரும் (சஞ்சு சாம்சன்) சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்தது சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.”

“ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் எந்த அளவிற்கு முக்கியமான வீரராக உள்ளார் ? யாருக்கு பதிலாக இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img