அடுத்த ஆண்டு CSK அணியில் தோனி இருப்பார்..!! ஆனால் இவருக்கு இடம் இல்லையா ?? ஐயோ..!

சமீபத்தில் தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு (ஐபிஎல் 2021) முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்த ஐபிஎல் 2021 போட்டிகள் அக்டோபர் மாதத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் கொரோனா தான்.

ஐபிஎல் 2021 கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக இந்தியாவில் தொடங்கியது. ஆனால் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் வேறு வழியில்லாமல் உடனடியாக மீதமுள்ள போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்தது பிசிசிஐ.

பின்னர் கடந்த மாதம் செப்டம்பர் 19ஆம் முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று, மொத்தம் 4 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் …!! தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்த்து ஓய்வு பெற போகிறார் என்று கேள்விகள் எழுகின்றன.

ஏனென்றால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2020ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்தம்பித்து போனார்கள். ஆனால் இன்னும் கிரிக்கெட் களத்தில் ஐபிஎல் போட்டிகள் மூலம் தோனியை கான முடியும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் அளித்த தகவலின் படி மகேந்திர சிங் தோனி நிச்சியமாக அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022ல் புதிதாக இரு அணிகள் இடம்பெற போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதனால் நிச்சியமாக மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளது. அதனால் ஒவ்வொரு அணியிலும் குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனால் தோனி அதில் இடம்பெறுவார் சந்தேகமில்லை. ஆனால் மற்றொரு முக்கியமான வீரருக்கு இடம்கிடைக்குமா ?? யார் அந்த வீரர் ?

நம்ம சின்ன தல சுரேஷ் ரெய்னா தான். கடந்த ஆண்டு சில முக்கியமான காரணத்தால் ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஐபிஎல் விளையாட முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் பின்பு கொரோனா காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் சரியாகவே இல்லை. அதனால் குறைவான ரன்களை மட்டுமே அடித்தார். பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம்பெற்றார்..!

அதனால் நிச்சியமாக சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி தக்க வைத்துக்கொள்ளுமா ? என்பது சந்தேகம் தான். அதுமட்டுமின்றி, சமீபத்தில் சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டியில் ; தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெருகிறாரோ அன்று தான் நானும் ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தோனி எப்பொழுது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாரோ…! அன்று தான் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெற்றார். அதுமட்டுமின்றி, சுரேஷ் ரெய்னாவும் தோனியும் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகின்றார்கள்.