வீடியோ ; செம அடி… !!! அடிச்ச அடியில் கேமரா கண்ணாடி நொறுங்கியது…!KKR vs SRH போட்டி ;

நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த 49வது ஐபிஎல் போட்டியில் ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதினார். அதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, நிர்ணயிக்கபட்ட 20 ஓவர் முடிவில் வெறும் 115 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் ஜேசன் ராய் 10, சஹா 0, வில்லியம்சன் 26, ப்ரியம் கார்க் 21, அபிஷேக் சர்மா 6, அப்துல் சமத் 25,ஹோல்டர் 2 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. அனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து இறுதி ஓவர் வரை போராடி 19.4 ஓவரில் தான் 119 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள அணியாக மாறியது கொல்கத்தா அணி. இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது. ஹோல்டர் வீசிய பந்தை எதிர்கொண்டார் நிதிஷ் ரானா.

அதனை அடித்த நிதிஷ் ரான ஒன் பிட்ச் செய்து பவுண்டரி போனது. அதுமட்டுமின்றி, அந்த பந்து சரியாக அங்கு இருந்த கேமரா மேல் அடித்தது. அதில் கேமரா கண்ணாடி நொறுங்கியது. அதன்வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மொத்தம் 4 அணிகள் தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். அதில் மூன்று அணிகள் உறுதியானது , சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள். இன்னும் ஒரு மட்டும் முடிவு செய்யாமல் திணறிக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த நான்காவது இடத்தை பிடிக்க மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் போராடி வருகின்றனர். எந்த அணி மீதமுள்ள நான்காவது இடத்தை பிடிக்கும் ?? என்று COMMENT பண்ணுங்க..!