கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22ஆம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 16 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்றைய போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர்.
புள்ளிபட்டியலின் விவரம் :
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்
- குஜராத் டைட்டன்ஸ்
- சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்
- பஞ்சாப் கிங்ஸ்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- டெல்லி கேபிட்டல்ஸ்
- மும்பை இந்தியன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணியாக தான் சென்னை அணி திகழ்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதுவும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு வெற்றிகரமான அணியாக திகழ்ந்துள்ளது என்பது தான் உண்மை.
42 வயதான தோனி இன்னும் ஒரு ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க போகிறார். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கும் முன்பே கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனை அடுத்து இப்பொழுது இளம் வீரரான ரூட்டுராஜ் தான் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய சென்னை அணி இரு போட்டிகளில் வென்ற நிலையில் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனான ரூட்டுராஜ் 1 ரன்களை மட்டுமே அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதனால் இளம் வீரரான ரூட்டுராஜ் சரியான கேப்டன் ஆக இருக்க முடியுமா ? இல்லையா என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில் : ” இல்லை இல்லை ரூட்டுராஜ் பற்றி கவலையே இல்லை. அவர் இப்பொழுது தான் கேப்டனாக விளையாட ஆரம்பித்துள்ளார். அதனால் ஏற்றம் இறக்கம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.”
“இது ஒரு மிகப்பெரிய போட்டி. அவர் (ரூட்டுராஜ்) நிச்சியமாக அனைத்து போட்டிகளும் ரன்களை அடிக்க வேண்டும், அது மிகவும் முக்கியமான ஒன்று. நிச்சியமாக ரூட்டுராஜ் -ன் கேப்டன்ஷி அருமையாக இருக்கிறது. ஒரு வீரராக இருந்து கொண்டு தீடிரென்று கேப்டனாக விளையாடுவது அவ்வளவு சுலபம் இல்லை. இருப்பினும் அதனை சிறப்பாக சமாளித்து விளையாடியுள்ளார் ரூட்டுராஜ்.’
“நிச்சயமாக இன்றும் தோனியின் பங்களிப்பு மிகப்பெரிய காரணமாக தான் இருக்கிறது. அவர் மட்டுமின்றி ஜடேஜாவின் பங்களிப்பும் ரூட்டுராஜ் -க்கு வழிநடத்த உதவியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.”