ஜடேஜா இல்லை ; சென்னை அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் ; உறுதியான தகவல் ஆ ?

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் அறிமுகம் ஆனது. கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நன்கு வரவேற்பு பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 16வது சீசன் வருகின்ற மார்ச் 31ஆம் அன்று தொடங்க இருக்கிறது. அதனால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சென்னை அணியின் முழு விவரம் :

ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, அதிக முறை ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக இருக்கும் ஒரே அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அடுத்த கேப்டன் யார் ?

சென்னை அணி மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர். ஆமாம் 41வயதான தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் அடுத்த கேப்டனாக யார் இருக்க போகிறார் என்று பல கேள்விகள் எழுந்தது..! அதில் நிச்சியமாக ஜடேஜா பெயர் இருக்க வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2022 தொடரில் ஜடேஜாவை தான் கேப்டனாக அறிவித்தனர்.

ஆனால் சென்னை அணியின் பங்களிப்பும், ஜடேஜாவின் பங்களிப்பும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் மீண்டும் மகேந்திர சிங் தோனியை கேப்டனாக அறிவித்தனர்.

இதனை பற்றி பேசிய சென்னை அணியின் உறுப்பினர் கூறுகையில் : “பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெற்றது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தான். அதுமட்டுமின்றி, பென் ஸ்டோக்ஸ் ஒரு ப்ளேயர் மட்டுமின்றி நல்ல ஒரு தலைவனும் கூட.”

“இருந்தாலும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இடம்பெற்றால் நிச்சியமாக அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்கள் ஏற்படும் என்பது தான் உண்மை. அதனால் இளம் வீரரான ரூட்டுராஜ் -ஐ எந்த காரணத்துக்காகவும் வெளியேற்றவே முடியாது என்று கூறியுள்ளனர்.”

ரஞ்சி கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பைகளில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இளம் வீரரான ரூட்டுராஜ் கேப்டனாக இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

சென்னை அணியின் கேப்டனாக வெளிநாட்டு வீரர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற வேண்டுமா ? அல்லது இளம் இந்திய வீரரான ரூட்டுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றால் சென்னை அணி சிறப்பாக இருக்குமா ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here