ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டியில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நான்கு அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் இப்பொழுது நடைபெற்று வரும் போட்டிகளில் சுவாரஷியமாக உள்ளது.


இந்திய கிரிக்கெட் அணி இரு போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், சூப்பர் 4 லீக் போட்டியில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை மீண்டும் எதிர்கொண்டது இந்திய. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.
அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும். இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனக்க தலைமையிலான இலங்கை அணியும் விளையாட உள்ளனர்.
இப்பொழுது இந்திய அணியின் ப்ளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்று தான். ஏனென்றால் முதல் போட்டியில் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் விளையாடினார்.


அதேபோல நேற்று நடந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் இடத்தில் மீண்டும் ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் ” யாருக்கு (ரிஷாப் அல்லது தினேஷ்) முக்கியமான துவம் கொடுப்பது என்று பிரச்சனை கிடையாது. நாங்க அப்படி வீரர்களை தேர்வு செய்வதும் கிடையாது.”
“நாங்க எப்பொழுது போட்டியை மனதில் வைத்து கொண்டு தான் விளையாடுவோம். சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்களை மாற்றி மாற்றி விளையாடுவது தான் எங்கள் பழக்கம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நாங்கள் தினேஷ் கார்த்திக்-கை விளையாட வைத்தோம். அப்பொழுது அவர் தான் சரியாக இருந்தார்.”
“அதுமட்டுமின்றி எப்பொழுது ப்ளேயிங் 11ல் சில முக்கியமான வீர்ரகளை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் நாங்கள் எப்பொழுது ப்ளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்தாலும் கவனமாக தான் இருப்போம். அதுமட்டுமின்றி எங்கள் அணியில் இருக்கும் 15 பெரும் சிறப்பாக தேர்வு செய்தால் தான், அனைவரும் எப்பொழுது வேண்டுமானாலும் விளையாட முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”