இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.


அதனால் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளார். எப்பொழுதும் ஒரு அணியின் தொடக்க வீரர்களின் ஆட்டம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ரோஹித் சர்மா இப்பொழுது அணியில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக யார் இடம்பெற போகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் “ரோஹித் சர்மாவுக்கு பதிலாக யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார்கள் ? முடிவு செய்திவிட்டீர்களா ? என்று பல கேள்விகள் எழுந்தன.


அதற்கு ” ஆமாம், நாங்க தான் முடிவு செய்ய போகிறோம். எங்கள் அணியில் பல வீரர்கள் தொடக்க வீரர்களாக விளையாடி வருகின்றனர். மயங்க் அகர்வால் எப்பொழுதும் தொடக்க வீரராக தான் விளையாடி வருகிறார். அப்படி இல்லையென்றால் ஸ்ரீகர் பாரத் இருக்கிறார்.”
“அந்தரா அணிக்காக பல முறை தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி பயிற்சி ஆட்டத்தில் 70, 43 ரன்களை அடித்துள்ளார். அதனால் ஸ்ரீகர் பாரத் விளையாடிய ஆட்டமும் எங்கள் பட்டியலில் உள்ளார் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”


மேலும் இந்திய அணியின் தொடக்க வீரரான புஜாராவை பற்றி பேசிய ராகுல் டிராவிட் கூறுகையில் : “எனக்கு தெரிந்து புஜாராவிடம் பல திறமை உள்ளது.இந்திய கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக தொடக்க வீரராக விளையாடி வந்துள்ளார்.”
“நாங்க என்ன செய்ய போகிறோம் என்பதில் சரியாக உள்ளோம். ரோஹித் ஷர்மாவுக்கு என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். அவர் (ரோஹித்) இல்லையென்றால் ப்ளேயிங் 11ல் எந்த விதமான குழப்பமும் இருக்காது. நாங்க தெளிவாக தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”
ரோஹித் சர்மா இல்லாத பட்சத்தில் யார் தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!